இன்றைய (02-12-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : ஒற்றுமை அதிகரிக்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்
உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்மாமன் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிந்தனைகளில் குழப்பமும், செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும் காணப்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : சோர்வு உண்டாகும்.

மிதுனம்
சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். நிர்வாகம் சார்ந்த பணிகளில் திறமைகள் வெளிப்படும். பயணம் தொடர்பான எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும். இசை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொறுமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிஷம் : மதிப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்
உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பயணங்களின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். லாபகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூசம் : தேடல் அதிகரிக்கும்.
ஆயில்யம் : ஆதாயம் ஏற்படும்.

சிம்மம்
இளைய சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். எழுத்து சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் தனவரவுகள் அதிகரிக்கும். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் ஆதாயமடைவீர்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : ஆதரவான நாள்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : வரவுகள் அதிகரிக்கும்.

கன்னி
வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணிதம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தடைகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : கலகலப்பான நாள்.
அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.
சித்திரை : அனுகூலமான நாள்.

துலாம்
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றி மறையும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் உண்டாகும். செய்கின்ற செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படவும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.
சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.

விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். ரகசியமான செயல்பாடுகள் மேம்படும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
அனுஷம் : சேமிப்புகள் குறையும்.
கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு
சேவை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சந்தோஷமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மூலம் : ஆதாயம் மேம்படும்.
பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.

மகரம்
வியாபாரம் தொடர்பான பணிகளில் மாற்றம் உண்டாகும். திறமைக்கேற்ப முன்னேற்றமான சூழல்களை உருவாக்குவீர்கள். செயல்பாடுகளில் அலட்சியப்போக்கு இன்றி செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். வாரிசுகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பொருட்சேர்க்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
திருவோணம் : அலட்சியமின்றி செயல்படவும்.
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம்
கால்நடை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்து சென்றால் ஒத்துழைப்பு மேம்படும். பயணம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : முயற்சிகள் ஈடேறும்.
பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.

மீனம்
அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். செய்கின்ற முயற்சிகளில் புதுவிதமான அனுபவங்களும், விரயங்களும் நேரிடும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றமான சூழ்நிலைகள் அமையும். சோர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.
ரேவதி : மாற்றமான நாள்.