இன்றைய (31-08-2021) ராசி பலன்கள்

0

மேஷம்
மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் எந்தவொரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இளைய உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். மனை விருத்தி தொடர்பான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.

ரிஷபம்
வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ரோகிணி : இடர்பாடுகள் குறையும்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

மிதுனம்
மனதில் தேவையற்ற சிந்தனைகளை குறைத்துக்கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். வாகனப் பயணங்களின்போது தகுந்த ஆவணங்களில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.

கடகம்
அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அறிமுகமில்லாத புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : பொருளாதாரம் மேம்படும்.
ஆயில்யம் : அனுபவம் கிடைக்கும்.

சிம்மம்
பெற்றோர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். விவசாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : திருப்திகரமான நாள்.
பூரம் : சேமிப்புகள் மேம்படும்.
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

கன்னி
விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான சில செயல்களை விரைந்து முடிப்பீர்கள். சிறிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளையும், திறமைகளையும் அறிந்து கொள்வீர்கள். தொழில் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
சித்திரை : முதலீடுகள் அதிகரிக்கும்.

துலாம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் மற்றும் லாபங்கள் மேம்படும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழல்கள் அமையும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த பயணங்களுக்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : சுபிட்சமான நாள்.
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகம்
தேவையற்ற சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
விசாகம் : பொறுமை வேண்டும்.
அனுஷம் : உதவிகள் காலதாமதமாகும்.
கேட்டை : புரிதல் உண்டாகும்.

தனுசு
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : மேன்மையான நாள்.
பூராடம் : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்
மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

கும்பம்
தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பயணங்களின் மூலம் மாற்றமும், லாபமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

மீனம்
வாக்குவன்மையின் மூலம் நன்மை உண்டாகும். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பணி சார்ந்த இடங்களில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
பூரட்டாதி : நன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி : உதவிகரமான நாள்.
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்