இன்றைய ராசிபலன்.

0

மேஷம்: சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் மதிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். மற்றவர்களுக்கு ஆதரவான பணிகளை செய்து கொடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : மதிப்புகள் அதிகரிக்கும்.
பரணி : லாபம் மேம்படும்.
கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

ரிஷபம் :அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். தொழில் தொடர்பான முயற்சிகளில் பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களின் மூலம் லாபமும், மேன்மையும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : காலதாமதங்கள் குறையும்.
ரோகிணி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.

மிதுனம் :
மற்றவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை அளிப்பீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் மாற்றமும், அனுபவமும் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்களில் குடும்பத்திலுள்ள பெரியோர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். தாயாரின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
திருவாதிரை : தன்னம்பிக்கை உண்டாகும்.
புனர்பூசம் : திருப்தியான நாள்.

கடகம் : வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். காப்பீடு தொடர்பான செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மேம்படும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த வாக்குவாதங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
புனர்பூசம் : எதிர்ப்புகள் குறையும்.
பூசம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
ஆயில்யம் : ஒற்றுமை உண்டாகும்.

சிம்மம் : குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவின் மூலம் லாபம் மேம்படும். வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வசதி வாய்ப்புகள் மேம்படும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம் : அறிமுகம் உண்டாகும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

கன்னி : மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். எந்தவொரு செயலையும் மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். உடன் பணிபுரிபவர்களின் சொந்த விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
அஸ்தம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சித்திரை : தெளிவு பிறக்கும்.

துலாம் : மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விலகி சென்ற உறவினர்கள் மீண்டும் விரும்பி வருவார்கள். பிள்ளைகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சில வேலைகளை சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் காரியங்களில் வெற்றி உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : கவலைகள் நீங்கும்.
சுவாதி : மாற்றங்கள் உண்டாகும்.
விசாகம் : வெற்றிகரமான நாள்.

விருச்சகம் : உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான சில நுட்பமான விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். தோற்றப்பொலிவு அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுக்கான முக்கியத்துவம் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : திருப்திகரமான நாள்.
கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு :உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மரியாதைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் நிர்வாகத்திறன் மேம்படும். சுவையான உணவுகளை உட்கொள்வதில் ஆர்வம் ஏற்படும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : மரியாதைகள் அதிகரிக்கும்.
பூராடம் : ஆர்வம் ஏற்படும்.
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

மகரம் : தடைபட்டு வந்த பணிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மாறுபடும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். செயல்பாடுகளில் இருந்துவந்த விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : துரிதம் ஏற்படும்.
திருவோணம் : தெளிவு பிறக்கும்.
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.

கும்பம் : கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் மனம் வருந்தும்படி பேசுவதை தவிர்க்க வேண்டும். படபடப்பு இன்றி செயல்படவும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
சதயம் : காலதாமதம் ஏற்படும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

மீனம் : கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திடீரென்று சில விஷயங்களுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
உத்திரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
ரேவதி : புதுவிதமான நாள்.